டில்லி

வெளிநாடுகளில் பத்மாவதி இந்தித் திரைப்படம் வெளியிட தடை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பத்மாவதி இந்தித் திரைப்படம் கடும் எதிர்ப்புக்குள்ளானதால் வரும் டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி வெளியிடுவதை தயாரிப்பாளர்கள் தள்ளி வைத்துள்ளனர்.  இந்தப் படம் ராஜபுத்திர ராணி பத்மினியை கேவலப் படுத்துவதாகக் கூறி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

பிரிட்டன் நாட்டு தணிக்கை வாரியம் பத்மாவதி திரைப்படத்தை அந்நாட்டில் திரையிட அனுமதி அளித்துள்ளது.  அதனால் பத்மாவதி  படத் தயாரிப்பாளர்கள் மற்ற வெளிநாடுகளிலும் படத்தை வெளியிட முடிவு செய்தனர்.  வழக்கறிஞர் சர்மா என்பவர் வெளிநாடுகளில் பத்மாவதி படம் வெளியானால் இந்திய கலாச்சாரம் மிகவும் கேவலப்படுத்தப் படும் எனவும் அந்தப் படம் வெளிநாடுகளில் வெளியிடப் படக்கூடாது எனவும் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ”இந்த படத்தை வெளிநாடுகளில் வெளியிட தடை இல்லை.  ஒரு படம் தணிக்கை ஆவதற்கு முன்பே அதை எதிர்க்கக் கூடாது.  அவ்வாறு செய்வது தணிக்கை வாரியத்தை அவமதிக்கும் செயலாகும். பெரிய பதவிகளில் உள்ளவர்கள் மற்றும் பொது வாழ்வில் உள்ளவர்கள் படத்தை பார்க்காமல் கருத்து சொல்வ்து தவறானது” என தீர்ப்பு வழங்கி உள்ளது

Also read

பத்மாவதி திரைப்படத்தை கேரளாவில் வெளியிட வேண்டும் : காங்கிரஸ் வற்புறுத்தல்

பத்மாவதி திரைப்படத்தை ஆதரித்த மம்தா பானர்ஜிக்கு பாஜக தலைவர் பகிரங்க மிரட்டல்!!