சென்னை: அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி. உடல் அடக்கம் செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்த நிலையில், மறைந்த எஸ்.பி.பி.யின் உடல் அரசு மரியாதையுடன் காவல்துறையினர் குண்டுமுழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

உடல்நலம் பாதிக்கப்பட்டு, நேற்று காலமான பின்னணி பாடகர் எஸ்.பி.பியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று அவரது நுங்கம்பாக்கம் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது பின்னர். இரவு அவரது பண்ணை வீடு அமைந்துள்ள தாமரைப்பாக்கத்தில் வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை முதலே அஞ்சலிக்கா வைக்கப்பட்டது.
இன்று காலையில் குறிப்பிட்ட அளவிலான பொதுமக்கள் மட்டுமே அஞ்சலி செலுத்த அனுமதி வழங்ககப்பட்டது. தொடர்ந்து திரையுல பிரமுகர்கள், தமிழகம் மற்றும் ஆந்திர மாநில அமைச்சர்கள் எஸ்பிபியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்.பி.பி. உடலுக்கு திரளானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதையடுத்து காலை 11 மணிக்கு மேல், எஸ்.பி.பி. உடலுக்கு அவரது குடும்பத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தினர். அதையடுத்து, இறுதிச்சடங்குகள் தொடங்கின.
கடைசி நேரத்தில் நடிகர் விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து, அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ள பகுதிக்கு காவல்துறை அணிவகுப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு தமிழக அரசு சார்பில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை செய்யப்பட்டது.

தொடர்டந்து, காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி குண்டுகள் முழங்கி இறுதி மரியாதை செலுத்தினர். 24 காவல்துறையினர் சேர்ந்து 72 குண்டுகள் முழங்கின. அதைத்தொடர்ந்து காவல்துறையினரின் சோக இசை இசைக்கப்பட்டது. காவல்துறையினர் இறுதி வணக்கம் செலுத்தினர்.

சரியாக 12.30 மணிக்கு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Patrikai.com official YouTube Channel