டில்லி:
ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும் முறையை அறிமுகப்படுத்த இருக்கிறது எஸ்.பி.ஐ. வங்கி.
இந்த திட்டத்திற்கு வங்கியின் நிர்வாகக் குழு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய திட்டத்தின்படி, ஊழியர்கள் தங்களின் மொபைல் டிவைஸ்களை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே, வங்கியில் மேற்கொள்ள வேண்டிய அவசர பணிகளை செய்து முடிக்கலாம்.
இதனால் அவர்கள் பயணிக்கும் நேரத்தை மிச்சப்படுத்த முடியும் என்று எஸ்பிஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், மொபைல் டிவைஸ்கள் மூலம் டேட்டாக்களை பாதுகாப்பான முறையில் கையாளவும், மொபைல் கணினி தொழில்நுட்பம் மூலம் பணிகளை மேற்கொள்ளவும் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்க்கெட்டிங், சமூக வலைதள மேலாண்மை, பணம் விநியோகம், புகார்கள், விண்ணப்பங்கள் உள்ளிட்ட பணிகளை ஊழியர்கள் வீட்டில் இருந்தே செய்யும் வசதி செய்து தரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.