சென்னை:
சென்னை நாதெள்ளா நகைக்கடை ரூ.250 கோடி வங்கி கடன் மோசடியில் ஈடுபட்டதாக புகார் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சி.பி.ஐ.க்கு அளித்துள்ள புகாரில்,‘‘ சென்னையை சேர்ந்த நாதெள்ளா நகைக்கடை நிறுவனம் தங்களிடம் 2010ம் ஆண்டு முதல் ரூ.250 கோடி கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் உள்ளது. கடன் பெற தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் போலி’’ என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக கனிஷ்க் என்ற நகைக்கடை ரூ.850 கோடி மோசடி புகாரில் சிக்கி உள்ளது. இந்நிலையில் சென்னையில் அடுத்து ஒரு நகை கடை வங்கி கடன் மோசடியில் சிக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.