sambaldacoits
 
ஒருக்காலத்தில் சம்பல் பள்ளத்தாக்குகளை ஆட்டிப்படைத்த கொள்ளையர்களான சீமா பரிகர், பல்வந்த் சிங் தோமர், ரேணு யாதவ், பஞ்சம் சிங், முன்னா சிங் மிர்தா, கப்பார் சிங், மற்றும்  மெலும் பலர்,அரசின் பேச்சுவார்த்தைக்குப் பின் சரணடைந்து,  சிறையிலிருந்து விடுதலையடைந்த பின்னர், தற்பொழுது திருந்தி வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு,மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சின்க் சவுகான் மத்திய அரசிடம், பள்ளத்தாக்குகளை சமநிலையாக்கி விளைநிலங்களாக மாற்றும் திட்டத்தினை முன்மொழிந்திருந்தார்.
 
 
ஞாயிறன்று வனத்துறை சர்வதேச தினம்    வரவிருக்கும் தருவாயில், சம்பல் பள்ளத்தாக்கு முன்னாள் கொள்ளையர்கள் மீள்சந்திப்பு நடைப்பெற்றது. ஆர்.எஸ்.ஏஸ் சேவகரும், ஸ்ரீ கல்ப்தாரு சன்ஸ்தன் அமைப்பினை நடத்திவரும் விஷ்னு லம்பா ஒரு வருடமாக திட்டமிட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
 
கடந்த கால அனுபவங்களை பகிர்ந்துக் கொண்ட அவர்கள், பள்ளத்தாக்குகளை சமநிலையாக்கி விளைநிலங்களாக மாற்ற விரும்பும் அரசின் அறிவிப்பு குறித்து கண்டனம் தெரிவித்தனர். முன்னாள் கொள்ளையர்கள் அனைவரும் அவர்கள் நேசிக்கும் நிலம் இப்போது மெதுவாக மரணிக்குமென கவலை தெரிவித்துள்ளனர்.
 
நாங்கள் தேடப்படும் கொள்ளையர்களாய் இருந்த போது, எங்கள் அனுமதி இல்லாமல் ஒரு ஒற்றை இலைகூட காட்டைவிட்டுச் செல்ல முடியாது,யாரும் காட்டு நிலத்தை அபகரிக்கவோ, மரங்கலை வெட்டவோ முன்வரவில்லை.”என நினைவுகூர்ந்தார் புகழ்பெற்ற பான் சிங் தொமரின் மருமகனான முன்னாள் வழிப்பறிக்காரர் பல்வந்த் சிங் தோமர்.
சம்பல் எங்கள் தாய். அரசாங்கம் விரும்பினால், சம்பலைப் பாதுகாக்க எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பகுதிகளை பாதுக்காக்க ஒதுக்கலாம். ஒரு இலை கூட எங்கள் காட்டை விட்டு வெளியேராமல் பார்த்துக் கொள்வோமென கூறி ஒரு குச்சி உதவியுடன் தனது நாற்காலியில் மீண்டும் அமர்ந்தார் தோமர் .
பல வருடங்களுக்கு முன்னர் நூறு பேரை கொன்ற கொள்ளையராய் இருந்து சன்னியாசியான பன்சம் சிங் நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து கவலை தெரிவித்தார்.
நாட்டு மக்களிடம் ஒழுக்கம் குன்றி வருவதாகவும், ஒரு பெண்ணிடம் தவறாய் நடந்துகொண்டதற்காக தாம் தன்னுடைய கொள்ளைகூட்டத்தை சேர்ந்த ஒருவரை உயிரோடு எரித்த்தாகவும், அத்தகைய ஒழுக்கம் இன்றைய சம்பலில் இல்லாமையால் பெண்கள் பாதிக்கப் படுவதாகவும் கூறினார்.
தாம், கொள்ளையர் ஆட்சி, அரசு ஆட்சி மற்றும் தற்பொழுது மதம் சார்ந்த ஆட்சி (பா.ஜ.க) மூன்றையும் பார்த்து விட்டதாகவும், கொள்ளையர்கள் ஒன்றுப்பட்டு இருந்தனர் என்றும், ஒன்ராய் இருந்தால் மலையையும் அசைக்கலாம், ஊழலையும் முடிவுக்கு கொண்டுவரலாம். இன்றைய ஊழல் ஆட்சியாளர்கள் போல் கொள்ளையர்கள் கிடையாது என்றும் நினைவு கூர்ந்தார். மேலும், தாம் 550 பேருடன் 1972ல் சரணடைந்த்தாகவும், அதில் சுமார் 200 பேர் உயிருடன் உள்ளதாகவும், அரசு விரும்பினால் தாங்கள் அனைவரும் காட்டைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடத் தயார் எனவும் கூறினார். எங்களால் மொத்த இந்தியாவையும் பாதுகாக்க முடியாது. எங்களுகென இடத்தை பிரித்து கொடுத்தால், பாதுகாப்பு பணியில் ஈடுபடத் தயார் எனத் தெரிவித்தார். நாங்கள் 25 மாவட்டங்களை ஆண்டு வந்ததாகவும், 3 நாட்களில் எம்.எல்.ஏ வை தேர்வு செய்துவிடுவோமெனவும், பஞ்சாயத்து தலைவரை 2 நாட்களில் தேர்வு செய்து விடுவோமெனவும் நினைவுகூர்ந்தார்.
மிகக் குறைந்த வயதான  முன்னாள் கொள்ளையரும் , காவ் ரக்க்ஷா தள் மாநில செயலாளருமான 28 வயது ரேணு யாதவ், ஏழு வருடங்கள் சிறைத் தண்டனையை முடித்து 2012ல் விடுதலையானவர். சமாஜ்வாடி கட்சித் தலைவர்களுடன் தனக்குள்ள செல்வாக்கினால் கடந்த மக்களவைத் தேர்தலில் பேசப் பட்டவர். இவரும் இந்த கோரிக்கைகளை ஆதரித்தார்.
சீமா பரிகர் பேசுகையில் “ எங்களுக்கு தெரிந்த அளவிற்கு, உழவர்களுக்கு இந்த காட்டைப் பற்றி தெரியாது. மரத்தடையின் கீழ் தான் எங்கள் வாழ்க்கை நகர்ந்தது. எங்கள் நாட்களில், காடுகள் பசுமையுடனும் அடர்ந்தும் காணப் பட்டன. அதில் 2% கூட தற்பொழுது இல்லை என்பது வேதனைக் குரியது. அரசு காடுகலைப் பாதுக்காக்க தவறி விட்டது. தங்களுக்கு பொருப்பு வழங்கப் பட்டால் ஆறு மாதத்தில் நல்ல முன்னேற்றத்தினை காணமுடியும் எனவும் தெரிவித்தார் சீமா.
கப்பார் சிங் “ நான் மக்களின் கைகளை வெட்டியதாகவும், பெண்களை நடனமாட வைத்த்தாகவும் கதை சொல்லப் படுகின்றது, நான் அப்படி எதுவும் செய்ததில்லை. இப்பொழுது மரங்கள் வெட்டப் படுவதுடன், வளங்கள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. இது தடுத்து நிருத்தப் பட வேண்டுமெனவும் என உருக்கமுடன் கூறினார்.
இதில் கலந்துகொண்ட ஜெய்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்சரன் போரா, முன்னாள் கொள்ளையர்களின்  உணர்வுகளைத் தாம் மதிப்பதாகவும், அவர்களின் கோரிக்கையை முதல்வர் மற்றும் பிரதமரிடம் தெரியப்படுத்தி, அவர்களுக்கு பொறுப்புகள் ஒப்படைக்கப்பட தம்மால் இயன்றதை செய்வதாகவும் கூறினார்.
இதில் கலந்துக் கொண்ட ராஜஸ்தான் மாநிலத் தலைமை வன அலுவலர் சௌதரி கூறுகையில், இதில் மூன்று மாநிலங்கள் சம்பந்தப் பட்டுள்ளதால் மத்திய சுற்றுச்சூழல் துறையின் பங்கு அவசியம் எனவும், இது குறித்து மாநில அரசு ஆலோசனைக் கூட்டம் நடத்துமெனவும் கூறினார்.  சம்பல் காட்டை மேம்படுத்த மாநில அரசு விதை தூவுவது உட்பட பல முயற்சியை மேற்கொண்டதாகவும் அவை பலனலிக்கவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
நாட்டை ஆள்பவர்கள் கொள்ளையடிக்கும் வேளையில், முன்னாள் கொள்ளையர்கள் நாட்டைக் காக்க முன்வருவது வரவேற்கத்தகுந்த முடிவு.