
ரியாத்
சவுதி அரேபிய இஸ்லாமிய மதத் தலைவர் ஆணகளோடு ஒப்பிட்டால் பெண்களுக்கு கால் பங்கு மூளையே உள்ளதாக கூறி உள்ளார்.
சவுதி அரேபியாவின் இஸ்லாமியத் தலைவர்களில் ஒருவர் ஷேக் சாத் அல் அஜாரி. இவர் சமீபத்தில் பெண்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கக்கூடாது என தெரிவித்துள்ளார். அத்துடன் பெண்களுக்கு மூளை மிகவும் குறைவு எனவும் கூறி உள்ளார். அவருடைய வீடியோ பதிவு சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அவர், “ஆணுக்கு பெண் சமம் அல்ல. அதுவும் மூளை (அறிவு) பொறுத்தவரை ஆணுக்குத்தான் அதிகம் மூளை. அவனுடைய மூளையில் அரைப் பங்கு, கால் பங்கு தான் பெண்ணுக்கு உள்ளது. ஆகவே அவர்கள் சாலையில் வாகனம் செலுத்த லாயக்கற்றவர்கள். பெண்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்க கூடாது. இது போல அறிவு குறைவான ஆண்களுக்கு ஓட்டுனர் உரிமம் எப்படி மறுக்கப்படுகிறதோ அதே போல் பெண்களுக்கும் தரக்கூடாது” என தெரிவித்துள்ளார்.
சவுதியில் தற்போது பெண்கள் வாகனம் ஓட்டத் தடை இல்லை எனினும் இதுவரை பெண்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube https://www.youtube.com/watch?v=i0L6EDoMt8w]
[youtube-feed feed=1]