விமான அனுமதி சீட்டில் ‘எஸ்எஸ்எஸ்எஸ்’ என இடம்பெறும் பயணிகளுக்கு சிக்கல் அதிகம்!!

Must read

வாஷிங்டன்:

விமான நிலையங்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் அனுமதி சீட்டு (போர்டிங் பாஸ்) முன் பகுதியில் ‘எஸ்எஸ்எஸ்எஸ்’ (Secondary Security Screening Selection) என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் அவர் பல சிரமங்களை சந்திக்க வேண்டி வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

‘‘இரண்டாம் நிலை பாதுகாப்பு சோதனைக்கு தேர்வு செய்யப்பட்டது’’ என்று இதற்கு அர்த்தம். போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம், அமெரிக்காவுக்கு பயணிக்கும் சில பயணிகளுக்கு இந்த சங்கேத வார்த்யை பயன்படுத்துகிறது. இதன் மூலம் அந்த நபரும், அவரது உடமைகளும் கூடுதல் பாதுகாப்பு சோதனைக்கு உட்பட்டதாகும். அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதலுக்கு இத்தகைய நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த பயணிகள் பயணத்தின் போது கூடுதல் தகவல்களை அளிக்க வேண்டி வரும். இதில் திருப்தி அடையாதபட்சத்தில் அந்த பயணி பயணிக்க அனுமதி மறுக்கப்படும் நிலையும் உருவாகலாம். பொதுவாக இந்த சங்கேத வார்த்தைகள் கம்ப்யூட்டர் சுழற்சி முறையில் தேர்வு செய்யும் அல்லது சோதனை செய்யும் அதிகாரிகள் தேர்வு செய்வார்கள்.

ஏற்கனவே முந்தைய பயணத்தின் போது முறைகேடான செயல் அல்லது விதிமீறலில் ஈடுபட்ட பயணிகள், ஆயுதம் வைத்திருக்கலாம் என்று சந்தேகப்படும்படியான நபர்கள், விமானத்தை பிடிக்க உரிய நேரத்தில் வராதது, உடமைகள் சோதனையில் பிரச்னை ஏற்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் இந்த பட்டியலில் இடம்பெறுவார்கள்.

அதோடு தொடர்ந்து பல முறை விமான டிக்கெட்களை ரொக்கம் செலுத்தி வாங்கும் பயணிகள், ஒரு வழி பயண டிக்கெட் பெறும் பயணிகள் இந்த பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். ஈரான், க்யூபா, வட கொரியா பயணிகள் கண்டிப்பாக இந்த பட்டியலில் இடம்பெறுவார்கள். இவர்கள் ஒவ்வொரு பயணத்தின் போதும் க டுமையான சோதனை மற்றும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

திரவ பொருள், லேப்டாப் போன்றவை கொண்டு செல்ல தடை விதிக்கப்படும். தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்லுதல் மற்றும் பாதுகாப்பான பயணத்துக்கு குந்தகம் விளைவிக்க கூடிய நபர்கள் மட்டுமே இந்த சோதனை நடக்கும் என்று போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

More articles

Latest article