லண்டன்:

கலிபோர்னியாவை சேர்ந்த உபேர் கால் டாக்சி நிறுவனம் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உபேர் கார்களை இயக்கி வருகிறது. லண்டனில் இதன் உரிமத்தை புதுப்பிக்க போக்குவரத்து துறை அதி£ரிகள் மறுத்துள்ளனர். இந்த உத்தரவை லண்டன் மேயர் சாதிக் கானும் ஏற்றுக் கொண்டுள்ளார்,

பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், பாதுகாப்பு தாக்கங்கள் உள்ளது என்று கூறி உரிமத்தை புதுப்பிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30ம் தேதியுடன் உரிமம் முடிவடைகிறது.

இதையடுத்து 4.60 லட்சம் பேர் ‘‘லண்டனில் உங்கள் உபேரை காப்பாற்றுங்கள்’’ என்று ஆன்லைனில் கையெழுத்திட்ட மனுவுடன் உரிமத்தை புதுப்பிக்க மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அந்த மனுவில்,‘‘ உரிமம் புதுப்பிக்கவில்லை என்றால் 40 ஆயிரம் உரிமம் பெற்ற ஓட்டுனர்கள் வேலையிழக்க நேரிடும். கடின உழைக்கும் திறன் கொண்ட இந்த ஓட்டுனர்கள் அதிகம் பாதிக்கப்ப டுவார்கள். லட்சகணக்கான மக்கள் வசதியான போக்குவரத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

‘‘லண்டன் நகர் முழுவதும் 3.5 மில்லியன் மக்கள் உபேர் மூலம் பாதுகாப்பு, எளிதான, வசதியான முறையில் பயன்படுத்தி வந்தது இதன் மூலம் தடைபட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் தனியார் வாடகை வாகன சட்டப்படி மேல் முறையீடு செய்வதன் மூலம் இந்த நடைமுறை முடியும் வரை உபேர் கார்களை லண்டனில் இயக்க முடியும். மேலும், போட்டி காரணமாக உபேர் கார் டிரைவர்கள் பல்வேறு இடங்களில் வன்முறையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவற்றை தடுக்க நிர்வாகம் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.