பேருந்துக் கட்டணத்தைவிட குறைவான கட்டணத்தில் விமானத்தில் பறக்கிறார்கள் சவுதி மக்கள்.

சவுதி அரேபியாவில் ரியாத் மற்றும் ஜெத்தாஹ் இடையே புதிய உள்நாட்டு விமான சேவை கடந்த செப்டம்பர் இறுதியில் துவங்கப்பட்டுள்ளது. இந்த இரு நகரங்களுக்கு இடையே உள்ள தூரம், 950 கிலோ மீட்டர்.

இந்த தூரத்தைக் கடக்க, பேருந்தில் 12 மணி நேரம் ஆகும். வானூர்தியில் 90 நிமிடங்கள்தான் ஆகும். நேரம் ஒரு புறம் இருக்கட்டும். கட்டணம்தான் ஆனந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பேருந்தைவிட குறைந்த கட்டணம்.. ஜெத்தாஹ்வில் இருந்து ரியாத்திற்கு காலை 8.05, மதியம் 1.10, 3.40 மாலை 3.40 &/இரவு 8.10 க்கு விமானம் புறப்படுகிறது.

அதே போல் ரியாத்திலிருந்து ஜெத்தாஹ்க்கு காலை 10.15, மதியம் 3.20, மாலை 5.50, இரவு 8.25 & 10.35 க்கு புறப்படுகிறது. வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் கட்டணம் 148,208,228 ரியால்கள் வரை நீளும் சேவைகள் மக்களிடையே குறிப்பாக நேரத்தை வெகுவாய் மிச்சப்படுத்தும் காரணத்திற்காகவும் வரவேற்பை பெறுகின்றது.

தகவல்: ஜாகீர் உசேன், ஜெத்தாஹ்.