ண்டன்

ஸ்லாமிய மன்னரான திப்பு சுல்தான் அணிந்திருந்த “ராம்” என பொறிக்கப்பட்ட தங்க மோதிரம் 145000 பவுண்டுக்கு ஏலம் போனது.

மைசூர் ஸ்ரீரங்க பட்டினத்தை சேர்ந்த இஸ்லாமிய மன்னர் திப்பு சுல்தான்.  இவர் 18ஆம் நூற்றாண்டில் மைசூர் மாகாணத்தை ஆண்டு வந்தவர்.  ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி வந்தவர்.  1799 ஆம் வருடம் நடந்த போரில் ஆங்கிலேயர்களால் இவர் கொல்லப்பட்டார்.

திப்பு சுல்தான் இஸ்லாமிய மன்னராக இருந்தாலும் பல இந்துக் கோயில்களுக்கு நிதி உதவிகள் செய்துள்ளதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.  மைசூர் அருகில் உள்ள நஞ்சன்கூடு சிவன் கோயிலுக்கு மரகதலிங்கம் ஒன்றை அளித்துள்ளதாக இன்றும் கூறப்பட்டு அந்த லிங்கத்துக்கு பூஜைகள் நடந்து வருகின்றன.

திப்பு சுல்தான் தனது கையில் 41.2 கிராம் (சுமார் 5.25 சவரன்) எடையுள்ள தங்க மோதிரத்தை எப்போதும் அணிந்து வருவார் எனவும், அந்த மோதிரம் அவர் இறந்ததும் அவர் உடலில் இருந்து பிரிட்டிஷ் ராணுவ ஜெனரல் ஒருவரால் கைப்பற்றப்பட்டு லண்டனுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.   அந்த மோதிரத்தில் இந்தி எழுத்துக்களில் “ராம்” என வடிவமைக்கப்பட்டுள்ளது.  அந்த மோதிரம் சமீபத்தில் லண்டனில் ஏலம் விடப்பட்டது.

இந்த மோதிரத்தை லண்டனைச் சேர்ந்த ஒருவர் 145000 பவுண்டுக்கு ஏலத்தை எடுத்துள்ளார்.  தற்போதைய சந்தை நிலவரப்படி இவர் இந்த மோதிரத்தை அதன் மதிப்பை போல் சுமார் 10 மடங்கு அளவில் ஏலம் பெறப்பட்டுள்ளது.   இந்த ஏலத்தை எடுத்தவர் தனது பெயர் மற்றும் விவரங்களை வெளியிட விரும்பவில்லை என பி பி சி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது கர்னாடகா அரசால்  ”திப்பு ஜெயந்தி” கொண்டாட்டப்பட்டு வருவதும் அதற்கு பா ஜ கவினரிடையே எதிர்ப்பு கிளம்பி உள்ளதும் தெரிந்ததே. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பா ஜ க கட்சி உறுப்பினர்கள் அந்த அழைப்பில் தங்களின் பெயர்கள் இடம் பெறக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.   அதன்படி அவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும்,  ஆனால் அழைப்புக்கள் அனைவருக்கும் அனுப்பப்படும் எனவும், கலந்துக் கொள்வது அவரவர் சொந்த விருப்பம் எனவும் கர்னாடகா முதல்வர் பதில் அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.