ரியாத்:

2018ம் ஆண்டு முதல் சினிமா தியேட்டர்கள் தொடங்க அனுமதி வழங்கப்படும் என சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

இது குறித்து கலாச்சார மற்றும் தகவல் துறை அமைச்சர் அலாத் பின் சலே அலாவத் ஒரு அறிக்கையில்,‘‘தொழில் ஒழுங்குமுறை, ஆடியோ விஷுவல் மீடியாவின் பொது ஆணையம் சினிமா திரையரங்குகளுக்கு உரிமங்களை வழங்குவதற்கான செயல்முறையைத் தொடங்கியுள்ளது. 2018 மார்ச் மாதத்தில் முதல் சினிமா தியேட்டர்கள் திறக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

சவுதியில் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது. எனினும் சமீப காலமாக சவுதி அரசர் சல்மான், இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் இதில் சில சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த செப்டம்பரில் பெண்கள் கார் ஓட்டுவதற்கான விதிமுறை 2018ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. 1980ம் ஆண்டுகளில் திரையரங்குகள் மூடப்பட்டன. 35 ஆண்டுகளுக்கு பின்னர் சினிமா தியேட்டர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சவுதி விலக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.