பொதுவெளியில் வழங்கப்படும் சவுக்கடி தண்டனையை சௌதி அரசு ரத்து செய்ய உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மனித உரிமை மீறல், கருத்துச் சுதந்திரம் பறிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சௌதி அரசு மீது நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

பொதுவெளியில் சவுக்கடி தண்டனையை கைவிட உள்ளதை நாட்டின் சட்ட ஆவணங்களை மேற்கோள் காட்டி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சௌதி அரசர் சல்மான் மற்றும் நடைமுறை ஆட்சியாளரும் பட்டத்து இளவரசருமானமுகம்மது பின் சல்மான் ஆகியோர் மேற்கொள்ளும் சீர்திருத்த செயல்பாட்டில் இந்த தண்டனை ஒழிப்பும் ஒன்று என அரசு ஊடகங்கள் புகழ்கின்றன.
இந்நிலையில் அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட சமூக செயல்பாட்டாளர் அப்துல்லா அல் ஹமீது வெள்ளியன்று உயிரிழந்தார்.
போதிய சிகிச்சை வழங்கப்படாததே அவரின் இறப்புக்கு காரணம் என நடுநிலையாளர்கள், அரசு அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
[youtube-feed feed=1]