ஜெனிவா: கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கு, மீண்டும் கொரோனா தொற்றாது என்பதற்கு, இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று அறிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பான WHO.

எனவே, கொரோனா பாதிப்பில் சிக்கிய “நோய் எதிர்ப்பு பாஸ்போர்ட்” அல்லது “அபாயமற்ற பாஸ்போர்ட்” வழங்குவதில் உலக அரசுகள் கவனத்துடன் செயல்பட வேண்டுமென உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இதன்மூலம், வைரஸ் தொற்றில் குணமடைந்தவர்கள், தரப்படும் மருத்துவ ஆலோசனைகளை அலட்சியம் செய்யாமல் முறையாகப் பின்பற்றி, அதன்மூலம் பிறருக்கு பரப்பாமல் அவர்கள் செயலாற்ற முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

ஏனெனில், ஒருமுறை வைரஸ் தொற்றி, அதிலிருந்து மீண்டவர்களின் உடலில், தானாகவே எதிர்ப்பு சக்தி உண்டாகியிருக்கும் என்ற மருத்துவக் கருத்தாக்கத்தின்படி, அத்தகையோருக்கு, “நோய் எதிர்ப்பு பாஸ்போர்ட்” அல்லது “அபாயமற்ற பாஸ்போர்ட்” வழங்கப்படுகின்றன.

இதன்மூலம், சம்பந்தப்பட்டவர்கள் மீண்டும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவும், மீண்டும் பணிக்குத் திரும்பவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக சுகாதார அமைப்பின் இந்த அறிவிப்பானது, உலக வட்டாரத்தில் மற்றொரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.