சவூதி:

டந்த ஆண்டு மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலைக்கு நான் காரணமல்ல என்று சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் ஊடகத்தின் செய்தியாளர் ஜமால் கஷோகி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் தேதி துருக்கி நாட்டிலுள்ள சவுதி அரேபியா தூதரகத்தில் வைத்து அந்நாட்டு அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டார். அன்றைய தினம் கஷோகி, தனது துருக்கிய காதலியை திருமணம் செய்யத் தேவையான ஆவணத்தை சேகரிப்பதற்காக,  துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்கு  சென்றார்.

அப்போது, சவுதி அரசாங்கத்தின் முகவர்கள் தூதரகத்திற்குள் கஷோகியைக் கொன்றனர். அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி மறைத்து விட்டனர். இந்தப் படுகொலை நடைபெற்று சில தினங்களுக்கு பின்னரே, உலகுக்கு தெரியவந்தது.

அவரது உடலை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த படுகொலையில் 11 பேர் மீது சவுதி அரேபியா குற்றம்சாட்டி விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது, இது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை. இந்த கொலைக்கு சவுதி அரேபியா பொறுப்பேற்றுள்ளதாக ஐ.நா அறிக்கை ஒன்று வலியுறுத்தியதுடன், இளவரசர் முகமதுவின் பங்கை விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தது.

இதற்கு பதில் தெரிவித்த சவூதி அரசு, சவூதி  இளவரசர் முகமது  “கொலைக்கு காரணம்” என்று நம்புவதாக அமெரிக்க காங்கிரஸ் கூறியுள்ளது. பட்டத்து இளவரசர்  நீண்ட காலமாக எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சமீபத்தில் கஷோகி திருமணம் செய்ய இருந்ததாக கூறப்பட்ட ஹாட்டிஸ் செங்கிஸ் என்ற இளம்பெண்,  கஷோகியின் படுகொலைக்கான குற்றவாளிகள் யார் என்று இளவரசர் முகமது தன்னிடம் சொல்ல வேண்டும்.  “ஜமால் ஏன் கொல்லப்பட்டார்? அவரது உடல் எங்கே? இந்தக் கொலைக்கான நோக்கம் என்ன? ” என கேள்வி எழுப்பி இருந்தார்.

இதையடுத்து, ஊடகம் ஒன்றுக்கு பேட்டிஅளித்த சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்,  சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டதற்கு “முழுப்பொறுப்பையும்” ஏற்றுக்கொள்வதாக   கூறினார். ஆனால் அவர் அதற்கு தான் “உத்தரவிட்டதாக கூறப்பட்ட” என்ற குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

கஷோகி கொலை செய்யப்பட்டது  கொடூரமான குற்றம் என்றவர், இந்த கொலை  சவுதி அரசாங்கத்திற்காக பணியாற்றும் தனிநபர்களால் செய்யப்பட்டுள்ளது. சவுதி அரசாங்கத்திற்காக 3 லட்சம்  மக்கள் தினமும் என்ன செய்கிறார்கள் என்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.