ரியால்

ரம்கோ என்னும்  சவுதி அரேபிய அரசுக்குச் சொந்தமான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஆளில்லாத விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

வளைகுடா நாட்டில்  சவுதி அரேபிய அரசுக்குச் சொந்தமான கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனமான அரம்கோவுக்கு ஏராளமான எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் உள்ளன.  இதில் சவுதி தலைநகர் ரியாத்தின் வடகிழக்கில் சுமார் 330 கிலோமீட்டர் தொலைவில் புக்கியாக் என்ற இடத்தில் ஒரு பிரமாண்டமான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது.

இங்கு நாளொன்றுக்கு 70 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்படுகிறது.  சில ஆண்டுகளுக்கு முன்பு ஏமனில் செயல்படும் ஹவுதி தீவிரவாதிகள் உள்ளிட்ட அமைப்புகள் இந்த ஆலையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டன. இதையொட்டி  இந்த ஆலையைச் சுற்றி கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இன்று இந்த ஆலை மீது ஆளில்லா விமானம் மூலம் வான்வழித் தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலால் சுத்திகரிப்பு ஆலையும், எண்ணெய் வயலும் தீ பற்றி எரிந்தன. கடும் போராட்டத்துக்குப் பிறாகு இந்த தீ பின்னர் அணைக்கப்பட்டது.

ஆளில்லா விமானம் மூலம் நடந்த  இந்த  தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.  சவுதி அரசு இந்த தாக்குதலால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை அறிவிக்கவில்லை. இந்த தாக்குதல்  தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் எனக் கருதி சவுதி அரசு விசாரணை நடத்தி வருகிறது.