சவுதி அரேபியா தனது குடிமக்கள் வருமான வரி செலுத்த வேண்டாம் என்றும், சவுதி நிறுவனங்கள் ஈட்டும் லாபத்திற்கு வரி செலுத்த தேவையில்லை என்றும் அறிவித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை சவுதி அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

அனைத்து மட்டத்திலும் பொருளாதார ரீதியிலான நடவடிக்கைக்ள, புதிய வரி விதிப்பு, தனியார் மயம். முதலீட்டு கொள்கையில் மாற்றம், அரசு செலவுகள் குறைப்பு போன்ற ந டவடிக்கைகளை எடுத்தது.

அந்நாட்டின் நிதியமைச்சர் முகமது அல் ஜதான் வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில், ‘‘சீரமைப்பு திட்டத்தின் கீழ் மக்களுக்கு வரி விதித்தது கவலை அளிக்கிறது. எனினும் இனி நாட்டின் குடிமக்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை. அதோடு சவுதி நிறுவனங்கள் ஈட்டும் லாபத்திற்கும் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை. மேலும் மதிப்பு கூட்டு வரி வரும் 2020ம் ஆண்டு வரை 5 சதவீதத்திற்கு மேல் உயர்த்தப்படமாட்டாது’’ என்று தெரிவித்துள்ளார்.

எண்ணைய் சாராத வருவாயை அதிகரிக்கும் வகையில் 5 சதவீத மதிப்பு கூட்டு வரியை அறிமுகம் செய்ய வளைகுடா ஒத்துழைப்பு குழுவில் உள்ள 6 அரபு முடியாட்சிகளும் முடிவு செய்துள்ளது. எனினும் ஒரே நேரத்தில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்வது சாத்தியமில்லை என்று சில நாடுகளின் பொருளாதார வல்லுனர்கள் மற்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.