ரியாத்: கொரோனா பரவல் எதிரொலியாக இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட  20 நாடுகளின் பயணிகளுக்கு சவுதி அரேபியா தற்காலிகமாக தடை விதித்து உள்ளது.

சவுதி அரேபியாவில் கொரோனா பரவி வருவதை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தொற்று பரவுவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி உள்பட 20 நாடுகளின் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரான்ஸ், எகிப்து, லெபனான், பாகிஸ்தான், அர்ஜென்டினா, பிரேசில், இந்தோனேசியா, அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், போர்ச்சுகல், சுவீடன், சுவிட்சர்லாந்து, துருக்கி ஆகிய நாட்டின் பயணிகள் சவுதி அரேபியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையானது சவுதி குடிமக்கள், தூதர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.