அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடனின் குடியுரிமையை ரத்து செய்து சவுதி அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சர்வதேச தீவிராத அமைப்புகளிடையே ஹம்சா பின்லேடனின் பெயர் அடிப்படுவதால் இந்த நடவடிக்கையை சவுதி அரசு எடுத்துள்ளது.
அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் 1994ம் ஆண்டு சூடானில் அடைக்கலமாக இருந்த போது, அவரின் குடியுரிமையை பறித்து சவுதி அரேபியா உத்தரவிட்டது. அப்போது அவரது மகன் ஹம்சா பின்லேடன் சிறு குழந்தையாக இர்நுதார். தொடர்ந்து தீவிரவாத செயல்களினாலும், இரட்டை கோபுர தகப்பினாலும் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாம பின்லேடனை அமெரிக்கா சுட்டுக் கொன்றது.
தனது தந்தையின் மறைவிற்கு பிறகு தீவிரவாத செயல்களில் தலையிட்ட ஹம்சா பிண்லேடன் சவுதி அரேபியாவிலும், ஆப்கானிஸ்தானிலும் இருப்பதாக கூறப்படுகிறது. தந்தையின் இறப்பிற்கு காரணமானவர்களை பழிவாங்க ஹம்சா பின்லேடன் எண்ணியுள்ளதாகவும், அதற்காகவே அல்கொய்தா தீவிரவாத அமைப்பில் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஹம்சா பின்லேடன் 2015ம் ஆண்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் சர்வதேச அளவிலான தீவிரவாத அமைப்புகளில் ஹம்சா பின்லேடன் முக்கிய நபராக பேசப்பட்டு வருகிறார் என ஐ.நா. தனது அறிக்கையில் கூறியுள்ளது. இதனால் ஹம்சா பின்லேடனின் சவுதி குடியுரிமையை ரத்து செய்வதாக க்டந்த நவம்பர் மாதம் அந்நாட்டு அரசு கூறிய நிலையில், நேற்று அதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடபப்ட்டது. இதற்கு முன்னதாக நேற்று ஹம்சா பின்லேடன் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.7 கோடி பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்தது.
1989ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் பிறந்த ஹம்சா பின்லேடன், சவுதியில் வாழந்து வந்தார். தற்போது கிட்டத்தட்ட 30 வயதை அடைந்த அவர் எங்கு, எப்படி உள்ளார் என்பது தெளிவாக தெரியவில்லை. கடந்த 2017ம் ஆண்டு ஹம்சா பின்லேடன் திருமண வீடியோ ஒன்றை அமெரிக்க சிஐஏ வெளியிட்டது. அதில், ஹம்சா பின்லேடன் தாடியும், மீசையும் இல்லாமல் இளைஞர் போன்று தோற்றமளித்தார்.