நாரிடா, ஜப்பான்
ஜப்பான் நாட்டில் உள்ள நாரிடா சர்வதேச விமான நிலையத்தில் முக அடையாளத்தை வைத்து விமானப்பயணத்துக்கு அனுமதி அளிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
சர்வதேச விமான நிலையங்களில் பாஸ்போர்ட் மற்றும் டிக்கட் பரிசோதனைக்கு பிறகு போர்டிங் பாஸ் வழங்கப்படுகின்றன. அந்த போர்டிங் பாஸ் எடுத்துக் கொண்டு இமிக்ரேஷன் பகுதிக்கு சென்று அங்கு அனைத்து ஆவணங்களும் சோதானை செய்த பிறகு விமானத்தில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. இதுவே நெடுங்காலமாக நடைபெறும் வழிமுறையாகும்.
இவ்வகையில் பயணிகளின் நேரம் மிகவும் செலவாவதாக கூறப்பட்டது. இதை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதை ஒட்டி ஆன்லைன் மூலம் போர்டிங் பாஸ் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. ஆயினும் இம்முறையிலும் பயணிகள் அடையாளம் குறித்த சோதனையில் அதிக நேரம் செல்வாவதாக கூறப்பட்டது. ஆகவே அனைத்து விமான நிலையங்களிலும் புதிய முறை அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அவ்வகையில் ஜப்பான் நாட்டில் உள்ள நாரிடா சர்வதேச விமான நிலையத்தில் ஒரு புதிய முறை அறிமுகப்படுத்தப் பட உள்ளது. இந்த புதிய முறைப்படி பயணிகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள பூத்களில் உள்ள காமிராக்களில் புகைப்படங்கள் எடுத்து தங்கள் முகப்பதைவை செய்துக்கொள்ள வேண்டும் அதன் பிறகு பாஸ்போர்ட் எண்ணுடன் அது ஒப்பிடப்பட்டு அவர்களுக்கு விமானப்பயண அனுமதி கிடைக்கும்.
ஆயினும் இமிக்ரேஷன் பகுதியில் ஒரிஜினல் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் சோதிக்கப்பட உள்ளன. உலகிலேயே முக அடையாளம் மூலம் விமானப்பயணம் செய்யும் முறை ஜப்பான் நாட்டில் உள்ள நாரிடா சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட உள்ளது. இந்த வசதி வரும் 2020 ஆம் வருடத்தில் அமுல்படுட்தப் பட உள்ளதாக கூறப்படுகிறது.