ரியாத்:

முதல் முறையாக சவுதியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டுள்ளது.

சவுதியின் ரியாத் மன்னர் ஃபாகித்தின் கலாச்சார மையத்தில் நடந்த 3 நாள் விழாவில் இறுதிநாளில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் சவுதி மன்னர் ஜவஹரா பின்ட் ஃபாகித் தனது மனைவியான நாட்டின் இளவரசியுடன் கலந்துகொண்டார். இதில் சவுதியின் முக்கிய குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

மேலும், இந்த விழாவில் கல்வியில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் விவாதமும் நடந்தது.

‘‘ சவுதி பெண்களையும், அவர்களது வெற்றியின் பங்களிப்பையும் கொண்டாட வேண்டும். கல்வியில் பெண்கள் ஆற்றியிருக்கும் சாதனைகளை இதர மக்களுக்கு தெரியபடுத்த வேண்டும். கலாச்சாரம், மருத்துவம், இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் அவர்கள் சாதனை படைத்துள்ளனர்’’ என்று மைய செய்தி தொடர்பாளர் முகமது அல் சயிப் தெரிவித்தார்.

‘‘இந்த கலை திட்ட நிகழ்ச்சிகளை யாரும் தடுக்க முயற்சிக்கவில்லை. இந்த வரவேற்பும், ஒத்தழைப்பும் எங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது ’’ என்று மைய பொது கண்காணிப்பாளர் முகமது அல் சயிப் தெரிவித்தார்.

பல துறைகளில் சவுதி பெண்களின் பங்களிப்பை எடுத்துக் கூறும வகையில் இந்த நிகழ்ச்சி கலாச்சாரம் மற்றும் தகவல் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல் படி நடந்துள்ளது.

2016ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இருபாலருக்கும் சம உரிமை வழங்கும் 144 நாடுகள் கொண்ட பட்டியலில் 141வது இடத்தில் சவுதி அரேபியா உள்ளது. மேலும், சவுதி பெண்களுக்கு 2015ம் ஆண்டில் வாக்களிக்கும் உரிமை, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாயப்பு போன்று சவுதியில் பெண்களுக்கு ஆதரவாக மேற்கொள்ளப்படும் பணிகளை மனித உரிமை ஆணையம் உற்று கவனித்து வருகிறது.

கடந்த ஜனவரியில் சவுதி பெண்கள் குழு நடத்திய நடன நிகழ்ச்சியன் வீடியோ பதிவை உலகில் கோடி கணக்கானோர் சமூக வளை தளங்களில் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.