சவுதி அரேபியாவில் முதல் முறையாக மதுபான கடை திறக்கப்பட உள்ளது.

இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த மதுபானக் கடை திறக்கப்பட உள்ளதாக அந்நாட்டு இளவரசர் மொஹமத் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த முடிவால் சவுதி மக்கள் திகைத்துபோயுள்ள நிலையில், இந்த மதுபானக் கடையில் இஸ்லாமியர்களுக்கு மதுபானம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

டிப்ளோ என்ற செயலி மூலம் விற்பனையை துவக்க உள்ள சவுதி அரேபிய அரசு வெளிநாட்டு தூதர்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாதோருக்கு மட்டுமே விற்க அறிவுறுத்தியுள்ளது.

மாதம் இத்தனை மதுபாட்டில்கள் என்று ரேஷன் முறையில் வழங்க முடிவெடுத்துள்ள சவுதி அரசு இதன் மூலம் வெளிநாட்டு தூதரகங்கள் மூலம் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்கப்படுவதை தடுக்க முடியும் என்று எதிர்பார்க்கிறது.

1957 முதல் மதுவகைகள் தடை செய்யப்பட்டுள்ள போதும் சவுதி அரேபியாவில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.