விருதுநகர் மாவட்டம் அருகே கருவண்டை விழுங்கிய 9 மாத குழந்தையை அறுவை சிகிச்சை இன்று அரசு மருத்துவர்கள் காப்பாற்றி உள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சத்தூர் அருகே குறிஞ்சி நகரை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் சுபஸ்ரீ. ஒன்பது மாத குழந்தையான சுபஸ்ரீ வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் போது அருகில் இருந்த கருவண்டை எடுத்து விழுங்கி விட்டது. சிறிது நேரத்திலேயே குழந்தை ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அதனை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
உடனடியாக குழந்தையை பரிசோதித்த தலைமை மருத்துவர் கேசவன் உட்பட மருத்துவர்கள் குழு அறுவை சிகிச்சை இன்றி கருவண்டை அகற்றினர். அதன்பிறகு தொடர்ந்து குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காலத்தாமதம் ஆகாமல் குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு பெற்றோர் தங்கள் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
இருப்பினும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக கண்காணிக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.