ர்நாடக மாநிலத்தை சேர்ந்த இளைஞரான சதிஷ் ஆச்சார்யா, பிரபல காட்டூனிஸ்டாக திகழ்ந்து வருகிறார். சமீப காலமாக மோடி தலைமையிலான அரசின் அவலங்களை கடுமையாக சாடி தனது கார்டூன்கள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறக்கப்பட்டதை குறிப்பிட்டு,  நன்றாக இயங்கிக் கொண்டிருந்த அரசுத்துறை நிறுவனங்களை  செயல்படாத சிலையாக்கியிருக்கிறார் மோடி என்று கடுமையாக விமர்சித்து காட்டூன் போட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதுபோல, மத்தியஅரசின் அதிகாரம்மிக்க துறைகளான, சிபிஐ, அமலாக்ககத்துறை, ஆர்பிஐ, யுஜிசி, பிரதமர் மோடி குறித்தும் ஆச்சார்யா வரைந்த கார்டூன்கள் மிகவும் பிரபலம். சமீபத்தில் புல்வாமா தாக்குதல் குறித்தும் தனது கார்டூன் மூலம் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி இருந்தார்.

இதுபோன்ற பிரபலமான கார்டூன்களை வரைந்தவர்  கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட சதிஷ் ஆச்சார்யா என்ற கர்நாடக இளைஞர். கர்நாடக மாநிலம் குண்டபுரா பகுதியை சேர்ந்தவர்.

கடந்த 2015ம் ஆண்டு போர்ப்ஸ் நடத்திய சிறந்த சிந்தனையாளர்கள் குறித்த கருத்துக்கணிப்பில், சதிஷ் ஆச்சார்யா இடம் பிடித்தவர். உலக சிந்தனையாளர்கள் மத்தியில் பிரபலமானவர். வெளிநாடு ஊடகங்களில் மிகவும் பிரபலமானவர்.

தொடக்க காலத்தில் பாக்கெட் மணிக்காக சில கன்னட நாளிதழ்களான தாரங்கா, சுதா, துஷார் போன்றவற்றில்,  கார்டூன்களை வரைய தொடங்கியவர்,  தற்போது பிரபலமான கார்டூனிஸ்டாக உருவெடுத்து உள்ளார். கார்டூன் வரைவதற்காக இவர் எந்தவித படிப்போ,  பயிற்சியோ பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக மாநிலம் குண்டப்புரா  பஹன்தர்கர் கல்லூரியில் பிகாம் முடித்து, மங்களூர் யுனிவர்சிட்டில் எம்.பி.ஏ முதுநிலை பட்டம் பெற்றுள்ளார்.

அதைத்தொடர்ந்து மும்பையில் உள்ள ஒரு விளம்பர நிறுவனத்தில்  கணக்கு வழக்கு பார்க்கும் பணியில் சேர்ந்தார்  அப்போதும் தனது  கார்டூன் வரையும் பணியையும், தொடர்ந்தார்.

அவர் வரைந்த கார்டூன் மூம்பையில் அதிகம் விற்பனையாகும் டேப்லாய்டு பத்திரிகையான மிட்டே-வில் வெளியானது, ஆச்சார்யா யார் என்பதை உலகுக்கு தெரிய வைத்தது. இதுதான் அவரது வாழ்வின் முக்கிய  திருப்பம்.

அதைத்தொடர்ந்து மிட்டே பத்திரிகையில்‘ 2003ம் ஆண்டு காட்டூனிஸ்டாக பணியில் சேர்ந்தார். சுமார் 9 ஆண்டு காலம் அங்கு பணியாற்றினார்.

அந்த சமயத்தில், உலக நாடுகளிடையே சார்லி ஹெப்டோ கார்டூன்கள் ( Charlie Hebdo Massacre) பிரசித்தம்.

சார்லி ஹெப்டோ படுகொலை பற்றிய ஆச்சார்யாவின் கார்ட்டூன் வெளியுறவு ஊடகத்தின் துயரத்தின் மீது மிக சக்திவாய்ந்த கார்ட்டூன்களில் ஒன்றாகக் கருதப்பட்டது

அதைத்தொடர்ந்து, ஆச்சார்யாவின், கார்டூன்,  தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், த டைம்ஸ் மற்றும் தி கார்டியன் போன்ற பத்திரிகைகளில் வெளியிடப்பட்டு  உலக அளவில் மேலும் பிரபலமானது.

சதிஷ் ஆச்சார்யா, 3 கார்டூன் தொடர்பான புத்தகங்களை ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் எழுதி உள்ளார்.  கிரிக்கெட் சம்பந்தமாக அவரது கார்டூன் புத்தகம் பெரும் வரவேற்பை பெற்றது.

சதிஷ் ஆச்சார்யாவின் கார்டூன்கள் இனிமேல் பத்திரிகை.காம் இணைய செய்தி பத்திரிகையிலும் தொடர்ச்சியாக வெளியாகும்…  வாசகர்கள் ஆச்சார்யாவின் கார்டூன்களை கண்டுகளித்து, தங்களது கருத்துக்களை பதிவிடலாம்….