அமெரிக்காவை சேர்ந்த மருந்து மாஃபியாக்கள் தன்னை மிரட்டியதை அடுத்து, இதன் பின்னணியில் உள்ள ஆபத்துகள் பற்றி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா.
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, சென்னையில் ஊட்டச்சத்து ஆலோசகராக இருக்கிறார். இவரது ஊட்டச்சத்து ஆலோசனை மையத்துக்கு சில நாட்களுக்கு முன்பு இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண்மணி வந்துள்ளனர். அவர்களில் இருவர் அமெரிக்க நாட்டை சேர்ந்தவர்கள், மற்றொருவர் இந்தியாவை சேர்ந்தவர்.
அவர்கள் மூவரும் தாங்கள் கொண்டு வந்துள்ளது மல்டி வைட்டமின் மாத்திரைகள் மற்றும் கொழுப்பை குறைக்ககுடிய மருந்துகளை திவ்யாவிடம் கொடுத்து, அவற்றை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும்படி கூறினர். தங்கள் நிறுவன மருந்து பட்டியல் ஒன்றையும் அளித்தனர்.
அந்த பட்டியலில் உள்ள பொருட்களின் விவரங்களை படித்த திவ்யா அதிர்ந்துவிட்டார். காரணம், அந்த பட்டியலில் உள்ள மருந்துகளில் “ஹைபர்விட்டமினோசிஸ்” என்ற ஆபத்தான ரசாயனம் சேர்க்கப்பட்டிருந்தது. இந்க மருந்துகளை சாப்பிட்டால் குமட்டல், கண்பார்வை மங்குதல், கல்லீரல் வீக்கம் போன்ற கடும் பாதிப்புகள் ஏற்படும்.
ஆகவே திவ்யா, “இந்த மருந்துகள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும். தவிர, அறிவியல் தரம் பெறாத மருந்துகளை நான் பரிந்துரைப்பதில்லை” என்று தெரிவித்துள்ளார்.
அப்போது திவ்யாவுக்கு அந்த மூவரும், லஞ்சம் கொடுக்க முன்வந்துள்ளனர். உடனடியாக திவ்யா அவர்களை தன்னுடைய ஊட்டச்சத்து மையத்திலிருந்து வெளியேற சொல்லியிருக்கிறார்.
அடுத்தாதக அந்த மூவரும், தங்களுக்கு இந்தியாவில் அரசியல் செல்வாக்கு அதிகம் உண்டு எனவும், இதே மருந்துகளை மும்பையில் வேறு எதாவது பிரபல ஊட்டச்சத்து ஆலோசகர் மூலமாக பிரபல படுத்தவும், விற்கப்போவதாகவும் மிரட்டல் தொணியில் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் கடுமையான வார்த்தைகளால் மிரட்டியிருக்கிறார்கள்.
இந்த சம்பவத்தை செய்தியாளர்களிடம் திவ்யா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அவர், இன்று பிரதமர் மோடிக்கு இது குறித்து கடிதம் எழுதியுள்ளார்.
அதில், அங்கீகரிக்க படாத , அபாயகரமான மருந்துகளை தடை செய்யுமாறு கேட்டு கொண்டிருக்கறார். மேலும், நீட் நுழைவு தேர்வினால் வரும் விளைவை பற்றியும், மருத்துவ உலகில் பெருகி வரும் அசிரத்தை பற்றியும் , நுழைவு தேர்வில் நடக்கும் அநியாயங்கள் பற்றியும் எழுதி இருக்கிறார்.