🎤 🎵 🎶 🎤 🤓🙈🤓
Thank u so much @SamCSmusic bro…. For ur information @gvprakash @anirudhofficial @MusicThaman @arrahman @ThisIsDSP @vijayantony @immancomposer @RSeanRoldan @hiphoptamizha #RajaVamsam pic.twitter.com/s39fPvcxev— Sathish (@actorsathish) February 4, 2020
கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி, ராதாரவி, யோகி பாபு, சதீஷ், விஜயகுமார், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராஜவம்சம்’. சாம் சி.எஸ். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் .
இந்தப் படத்தில் சசிகுமார், சதீஷ் உள்ளிட்டோர் நடனமாடும் பாடல் ஒன்று உள்ளது. இதில் சதீஷ் பாடும் வரிகளை, அவரை வைத்தே பாட வைத்துள்ளார் சாம் சி.எஸ். இதனால் இந்தப் படத்தின் மூலம் பாடகராக அறிமுகமாகிறார் சதீஷ்.
இந்தத் தகவலைத் தனது ட்விட்டர் பதிவில் சாம் சி.எஸ்.ஸுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், உங்களுடைய கவனத்துக்கு என்று ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கி அனைத்து இசையமைப்பாளர்களின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.