புதுக்கோட்டை:  ஜாமினில் வந்த மறுநாளே செந்தில் பாலாஜி அமைச்சராக்கப்பட்டதை உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில், இந்த விஷயத்தில்  எந்த அவசரமும் காட்டவில்லை  என்று கூறியவர், சாத்தனூர் அணை முறைப்படிதான் திறக்கப்பட்டது  என சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் இருந்துவிட்டு ஜாமினில் வெளிவந்த  அமைச்சர் செந்தில் பாலாஜி அடுத்த நாளே மீண்டும் அமைச்சராக்கப்பட்டது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இதனால்,  ஜாமீனை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,  இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்தது.  , வழக்கில் சம்மந்தப்பட்டவா் அமைச்சரானால், வழக்கின் சாட்சிகள் பயப்படுவாா்கள் என்று மனுதாரரின் குற்றச்சாட்டில் நியாயம் உள்ளதால், செந்தில் பாலாஜி தரப்பு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில்,  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி , “செந்தில்பாலாஜி அமைச்சர் பொறுப்பேற்றது பற்றி நீதிமன்றத்தின் கருத்து குறித்து கேட்கிறீர்கள். ஒருவரை அமைச்சராக்குவது, நீக்குவது முதல்வரின் முழு உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது.  செந்தில் பாலாஜிக்கு  அவசரமாக அமைச்சர் பதவி எதுவும் கொடுக்கப்படவில்லை. கைது செய்யப்படும்போதும் அவர் அமைச்சர்தான், சிறையில் இருக்கும் காலத்தில் அமைச்சராகத்தான் இருந்தார். இப்போது வெளியே வந்த பிறகு அமைச்சராக்கப்பட்டிருக் கிறார்” எனத் தெரிவித்தார்.

பின்னர் மழை நிலவரம், சாத்தனூர் அணை திறப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறியவர்,  “சென்னையில் மழை நின்ற 5, 6 மணி நேரங்களில், தேங்கிய மழை நீரை முழுமையாக அகற்றி இயல்பு நிலை திரும்பச் செய்திருக்கிறோம் என்றவர்,  சாத்தனூர் அணை முறைப்படி அறிவிப்பு வெளியிடப்பட்டு படிப்படியாகத்தான் திறக்கப்பட்டது. அதிக மழை பெய்ததால், தென்பெண்ணையாற்றில் மிக அதிக தண்ணீர் வந்து சில பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது என்றவர்,செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டபோது ஏற்பட்ட உயிரிழப்புகளைப் போல, நேரிடாமல் கவனமாக செயல்பட்டிருக்கிறோம் என கூறினார்.

மழையால் சேதமடைந்த பகுதிகளில்,  சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ரூ. 2ஆயிரம் குறைவு எனப் பலரும் கூறுகிறார்கள். நிவாரண உதவிப் பொருள்களை கூடுதலாக வழங்கத் திட்டமிட்டிருக்கிறோம்.  இதுபோன்ற பேரிடர்களில் மத்திய அரசு இதுவரை நமக்கு செய்ய வேண்டிய உதவியைச் செய்யவில்லை.  இந்த முறை வேண்டிய உதவிகளை அவர்கள் செய்ய இருப்பதாக தகவல் வந்துள்ளது. பொருந்திருந்து பார்ப்போம்.

இவ்வாறு கூறினார்.

5 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கைக்கு பிறகே சாத்தனூர் அணை திறக்கப்பட்டது! சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்