சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு, காவல்துறையினரால் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் காரணமாக, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து 2 பேரும் உயிரிழந்தனர். இநத்சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, தானாகவே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்பேரில், சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள சாத்தான்குளம், கோவில்பட்டி சென்று விசாரணை நடத்தினர். இந் நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தந்தை,மகன் கொலை வழக்கில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த குற்றப்பத்திரிகையில், சாத்தான்குளம் காவல்நிலைய தலைமை காவலர் பியூலா, ரேவதி உள்ளிட்ட 6 போலீசார் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும், மேலும், கோவில்பட்டி கிளை சிறை கண்காணிப்பாளர், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரும் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். அத்துடன், மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கை, தடயவியல் ஆய்வு மைய அறிக்கையும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. மொத்தம் 105 சாட்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.