மதுரை:
சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சாத்தான்குளம் விவகாரம்: நெல்லை சிபிசிஐடி டி.எஸ்.பி விசாரிக்க உயர்நீதி மன்றம் மதுரை அதிரடி உத்தரவிட்டு உள்ளது.
சாத்தான்குளம் வணிகர்களான பென்னிக்ஸ், ஜெயராஜ் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில்,  காவலர்களின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் காலரணமாக அவர்கள் இருவரும் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது.
இந்த வழக்கை கையில் எடுத்துள்ள உயர்நீதி மன்றம் மதுரை கிளை,  மாவட்ட நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால், காவலர்கள் சிலர் நீதிபதியை மிரட்டிய நிலையில், கடும் கோபம் அடைந்த நீதிபதிகள், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டதுடன் காவல்துறைக்கும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும்,  காவல்துறையினரால் தாக்கப்பட்ட  இறந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையும் இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள்,  உடல்நிலை உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்வதற்கான முகாந்திரம் உள்ளது.
சாத்தான்குளம் விவகாரம்- சிபிஐ விசாரணையை துவக்கும் வரை, நெல்லை சிபிசிஐடி டி.எஸ்.பி அனில்குமார் விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் தமிழக டிஜிபியின் உத்தரவிற்காக காத்திருக்காமல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உடனடியாக விசாரணையை கையிலெடுக்கவும் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.