சென்னை: சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் மதுரை கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்த கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் அவர்கள் மீது விடுபட்ட கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மதுரை கீழமை நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் மனு அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த மனுவை  கீழமை நீதிமன்றம் ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, சிபிஐ தரப்பு மதுரை உயர்நீதிமன்றதில்  வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற சிபிஐ மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை ரத்து செய்து, கீழமை நீதிமன்றமே தேவைப்படும் வழக்கு பிரிவுகளை சேர்க்கலாம். தேவைப்பட்டால் நீக்கலாம் என கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

சாத்தான்குளம் தந்தை மகன் காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட வழக்கில்,  சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் போலீஸார் என 9 பேர் மீது சிபிஐ கொலை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறது. . இந்த வழக்கு விசாரணை மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இதுவரை இரண்டு குற்றப் பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவின் போது ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேர் மீதும் இபிகோ 120 B (கூட்டு சதி) பிரிவில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய சிபிஐ மனு வழங்கியது. ஆனால், அதை கீழமை நீதிமன்றம் மறுத்தது. ஆனால் அதை ஏற்க மறுத்த சிபிஐ,  உரியக் குற்றப்பிரிவுகளில் குற்றச்சாட்டுப் பதிவு செய்யாவிட்டால், விசாரணை  இறுதியில் குற்றவாளிகள் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது என்று கூறியதுடன், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேர் மீது இபிகோ 120 பி பிரிவிலும், மேலும் விடுபட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்.” என கூறப்பட்டிருந்தது.