மதுரை: காவலர்களால் அடித்துக்கொல்லப்பட்ட சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைதான தலைமை காவலர் முருகனின் ஜாமீன் மனு, 5வது முறையாக மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
சாத்தான்குளம் வியாபாரிகள்ன ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சந்த வழக்கில் இதுவரை காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சாத்தான்குளம் காவல்நிலைய முன்னாள் தலைமை காவலர் முருகன், மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி நசிமா பானு முன்பு இன்று நடைபெற்றது . அப்போது, அவருக்கு ஜாமின் வழங்க சிபிஐ வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, அவரது ஜாமீன் மனுவை செப். 4 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார். முருகனின் ஜாமீன் மனு, 5 ஆம் முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது