சென்னை: 4 ஆண்டுகளை சிறை தண்டனை முடிந்து தமிழகம் திரும்பும் சசிகலாவால் திமுவுக்கு சாதகமான நிலை உருவாகி உள்ளது என திமுக எம்.பி. நவாஸ்கனி தெரிவித்து உள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள சசிகலா, அதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், சிறையில் இருந்து விடுதலையான சசிகலா இன்று சென்னை நோக்கி வந்துகொண்டிருக்கிறார். அவரது காரில் அதிமுக கொடியும், அவரது தோளில் அதிமுக துண்டும் போர்த்தப்பட்டு உள்ளது. இதை அகற்ற அதிமுக தலைமை எடுத்த முடிவு தோல்வியில் முடிந்துள்ளது.
இந்த நிலையில், செய்தியளார்களை சந்தித்த ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி கூறியதாவது,
சசிகலா வருகை தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்றும், குறிப்பாக அதிமுகவினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், சசிகலாவின் வருகை திமுகவுக்கு சாதகமாக தான் உள்ளது என்றவர், சசிகலா மீண்டும் தமிழக அரசியல் களத்திற்குள் புகுந்தால், அது திமுகவுக்கு அதிக வெற்றி வாய்ப்பை பெற்றுத்தரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் திமுக கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களிடையே திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய ஆதரவு உள்ளது. மக்கள் சந்திப்பின்போது , ஸ்டாலின் சொல்லும் ஒவ்வொரு வாக்குறுதிகளையும் முதல்வர் பழனிசாமி நிறைவேற்றி வருகிறார். கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும் என ஸ்டாலின் முதல்வர் கல்வி கடனையும் ரத்து செய்து விடுவார் . அந்த அளவிற்கு அதிமுக தலைமை பயத்தில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.