கிருஷ்ணகிரி: பெங்களுரு சிறை வாழ்க்கை முடிந்து, இன்று தமிழகம் நோக்கி அதிமுக கொடியுடன் வந்துகொண்டிருக்கும் சசிகலாவை கிருஷ்ணகிரியில், காவல்துறையினர் தடுத்தி நிறுத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அவரது காரில் இருந்து அதிமுக கொடியை அகற்றாமல், கொரோனா விதிமுறைகளை மீறியதாக நோட்டீஸ் வழங்கினர்.

கர்நாடகாவில் இருந்து இன்று காலை சசிகலா இன்று காலையில் புறப்பட்ட சசிகலா, அதிமுக கொடி பொருத்திய காரில் பயணித்தார். ஆனால், அவர் அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என எதிர்ப்பு கிளம்பியது, தனது காரில் இருந்த அதிமுக கொடியை அகற்றிவிட்டு,  அதிமுக நிர்வாகிக்கு சொந்தமான இன்னோவா காரில் ஏறி பயணமாகி வருகிறார்.  அந்த காரில் ஜெயலலிதா படத்துடன் கூடிய அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஓசூர் அருகே சசிகலா காரை காவல்துறையினர் திடீரென  தடுத்து நிறுத்தினார். இதனால் பதற்றம் நிலவியது. அப்போது கிருஷ்ணகிரி போலீசார் ஒரு நோட்டீசை சசிகலாவிடம் கொடுக்க வந்தனர். அதிமுக கொடியைக் அகற்ற வருகிறார்கள் என்று தொண்டர்கள் ஆவேசம் அடைந்தனர். இதனால் சில நிமிடங்கள் பதற்றம் ஏற்பட்டது. அப்பேது, அவரிடம் வந்த சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் அந்த நோட்டீசை வாங்கிக்கொண்டார்.

தடையை மீறி காரில் அதிமுக கொடியுடன் வந்ததால் அதைக்கண்டித்து காவல்துறை அந்த நோட்டீசை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், தற்போதும் கொரோனா தொற்று பரவல் நடவடிக்கையாக  சட்டம் ஒழுங்கு நிலையை கருத்தில் கொண்டு 30(2) காவல் சட்டம் அமலில் இருப்பதால் 6 செயல்முறைகளை பின்பற்ற இந்த செயல்முறை ஆணையின்படி தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

அதன்படி,

வி.கே.சசிகலா வாகனத்தின் பின்பு ஐந்து வாகனங்கள் மட்டுமே பின் தொடர்ந்து வர வேண்டும்.

அமமுக கட்சியினரின் இதர வாகனங்கள் பின் தொடர்ந்து வர அனுமதி இல்லை. அவ்வாகனங்கள் வழியிலேயே நிறுத்தப்படும்.

வி.கே.சசிகலா உட்பட யாரும் அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்துவது விதிமீறல்கள் ஆகும்.

ஒவ்வொரு வரவேற்பு இடத்திலும் அங்கு உள்ள கூட்டத்தில் 10 சதவீத அளவு சீருடை அணிந்த அமமுக தொண்டர்கள் நிறுத்தி கூட்டத்தை ஒழுங்கு படுத்திட வேண்டும்.

பட்டாசு வெடிப்பதற்கும் பேண்டு வாத்தியங்கள் இசைப்பதற்கும் கண்டிப்பாக அனுமதி இல்லை. கொடி, தோரணங்கள், பேனர்கள், பிளெக்ஸ் பேனர்கள் அனுமதி இன்றி வைக்கக்கூடாது.

விதிமுறைகளை மீறும் பட்சத்தில் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

என்று 6 உத்தரவுகளை கிருஷ்ணகிரி காவல் துணை கண்காணிப்பாளர், சசிகலாவுக்கு வழங்கினார்.

முன்னதாக சசிகலா  ஓசூர் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் டிடிவி தினகரன், இளவரசியுடன் இணைந்து சாமி தரிசனம் செய்தார்.. கோயில் பிரகாரத்தை சுற்றிய அவர்,  சாமி தரிசனம் செய்தார்.

அதிமுக நிர்வாகியின் அதிமுக கொடி பொருத்திய காரில் சென்னை வருகிறார் சசிகலா… கொடியை அகற்றுவதில் எடப்பாடி அரசு தோல்வி…