தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாற்றிலேயே 2021ம் ஆண்டு தேர்தல், மிக அதிக பரபரப்பைக் கொண்டதாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.
ஏனெனில், புதிய தலைவர் ஸ்டாலின் தலைமையிலான திமுக, அதிமுகவில் பஞ்சாயத்துக்களுக்கு மத்தியில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி, தேர்தலுக்கு முன்பாகவே சசிகலாவின் விடுதலை, பன்னீர் செல்வத்தின் சந்தர்ப்பவாதம், பாரதீய ஜனதாவின் திருவிளையாடல்கள், ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு, டிடிவி தினகரனின் அமமுக என்று ஏகப்பட்ட விஷயங்கள் இத்தேர்தலில் களைகட்டுவதற்கு வரிசைக்கட்டி நிற்கின்றன.
எனவே, புதிதாக நிறைய முளைத்துள்ள யூடியூப் சேனல்கள், செய்தி இணையதளங்கள், அரசியல் விமர்சகர்கள் மற்றும் மரபுவகை மீடியாக்கள் ஆகிய அனைத்திற்கும் நல்ல தீனியோ…தீனி! என்றே சொல்லலாம்.