சென்னை:

அதிகாரப்போட்டி, அரசியல் பிரவேசம் காரணமாக சசிகலா குடும்பத்தினரிடையே மோதல் உச்சக்கட்டத்தில் நடைபெற்று வருகிறது.

சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும், சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரனுக்கும் இடையே சில ஆண்டுகளாக பனிப்போர் நடைபெற்ற வந்த நிலையில், தற்போது வெளிப்படையாக மோதல் விசுவரூபமெடுத்து வருகிறது.

இரு தரப்பினரும் ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம் சாட்டி வரும் நிலையில், இவர்களின் அதிகார மோதல், மன்னார்குடி குடும்பத்தினரிடையே கல கலக்கத்தை  ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்,  திவாகரன் அமைதியாக இருக்க வேண்டும் என்றும், ருதய அறுவை சிகிச்சை செய்த திவாகரன் அமைதியாக இருப்பதே நல்லது என்று எச்சரித்தார்.

மேலும், அமைச்சர்களின் நலனுக்காக மட்டுமே, தமிழக அரசு மத்திய அரசுடன் இணைக்கமாக இருக்கிறது என்றார். இது மக்களுக்காக அல்ல என்றும், அடுத்து வரும் தேர்தலில் இது தெரியவரும என்ற டிடிவி,  அதிமுக அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் என்றும் கூறினார்.

திவாகரன்,  அவரது மகன் ஜெய்ஆனந்தின் பதிவு மற்றும் பேட்டி  குறித்து செய்தியாளர்கள் டிடிவியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த டிடிவி,  திவாகரன் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே எனக்கு எதிராக செயல்படு கிறார் என்று குற்றம் சாட்டினார்.

சசிகலாவின் தம்பி என்பதை தவிர திவாகரனுக்கும், கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறிய டிடிவி, கடந்த 2002 ல் இருதய அறுவை சிகிச்சை செய்த திவாகரன் அமைதியாக இருப்பதே நல்லது என்று என்றும் எச்சரித்தார்.