Skip to content
  • Fri. Sep 11th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்பட மாட்டார்! பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம் தகவல்

Dec 5, 2020

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்படமாட்டார் என்று பெங்களூரு சிறை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இதனால், புலி வருது  புலி வருது என பூச்சாண்டி காட்டிவந்த அமமுகவினர்களுக்கும், சசிகலா வழக்கறிஞர்களுக்கும்  கர்நாடக சிறைத்துறை முடிவுகட்டியுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா தோழியாக இருந்து, ஊழல்முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தவர் மன்னார்குடி மாஃபியா என அழைக்கப்படும் குடும்பத்தைச் சேர்ந்த சசிகலா.  இவர்மீதான சொத்து குவிப்பு வழக்கில்  4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்களின் தண்டனை காலம் அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி மாதம் நிறைவடைய உள்ளது. இதையயொட்டி, அவர் செலுத்த வேண்டிய அபராதத்தொகையான ரூ.10 கோடியையும் கடந்த மாதம் சசிகலா நீதிமன்றத்தில் செலுத்தினார். இதன் காரணமாக, அவர் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என அவரது வழக்கறிஞர்களும், அமமுக நிர்வாகிகளும் கூறி வந்தனர்.
அதுபோல, சசிகலாவும், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி சசிகலா பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை நிர்வாகத்திடம்  மனு கொடுத்திருந்தார். அந்த மனுமீது  சிறைத்துறை ஆய்வு செய்வதாக தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக,  சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் சசிகலா விடுதலை  குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு  பரப்பனஅக்ரஹாரா சிறை நிர்வாகம் பதிலளித்துள்ளது. அதில்  ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பெண் தண்டனை கைதி, 9 ஆண்டுகள் சிறையில் கழித்த நிலையில் 60 வயதை அடைந்திருந்தால் அவர்களுக்கு, தண்டனையில்  இருந்து விலக்கும் பெறும் வகையில்,  விடுமுறை கால சலுகை வழங்கும் முறை நடைமுறையில் உள்ளது. ஆனால், ஊழல் வழக்கில் அந்த நடைமுறை கிடையாது என்று  தெரிவித்து உள்ளது.
பெங்களூரு சிறை நிர்வாகம் அளித்துள்ள பதிலின்படி,  ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவுக்கு விடுமுறை சலுகை கிடைக்காது என்பது உறுதியாகி உள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா முன்பு 35 நாட்கள் சிறையில் இருந்தார். இந்த நாட்கள் அவரது தண்டனை காலத்தில் இருந்து கழிக்கப்படுகிறது. அதே நேரத்தில் அவர் 2 முறை 17 நாட்கள் பரோலில் வீட்டுக்கு சென்றார். இந்த 17 நாட்களும் தண்டனை காலத்தில் சேர்க்கப்படும். அதன்படி பார்த்தால் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை நிர்வாகம் ஏற்கனவே கூறியபடி வருகிற ஜனவரி மாதம் 27-ந் தேதி தான் சசிகலா விடுதலை ஆவார் என்பது உறுதி என்று கூறப்படுகிறது.

Post navigation

அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் இல்லங்களில் விளக்கு ஏற்றி வைத்து ஜெயலலிதாவை வணங்குங்கள்! எடப்பாடி பழனிச்சாமி
சூரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்க ஆணையம்: ஒரு மாதத்திற்கு பிறகு கொந்தளிக்கும் கமல்ஹாசன்… வீடியோ

Related Post

தமிழ் நாடு நெட்டிசன்

மில்லினியல்ஸ், Gen Z-யைத் தொடர்ந்து Gen X-யையும் தொற்றிக் கொண்ட 80’s ஸ்டைல் AI புகைப்படங்கள்… உங்களுக்கான Promptகள் இதோ!

தமிழ் நாடு

ஒப்புவித்தல் போட்டிபோல சட்டப்பேரவையில் பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் முதலமைச்சர் – உதயநிதி

தமிழ் நாடு

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்? 25 ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்த TNHB, சென்னை மாநகராட்சி அனுமதி

உலகம்

உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar
உலகம்

ஹாரி–மேகன் அமெரிக்காவை விட்டு பிரிட்டனுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி: டிரம்ப் கருத்து

September 3, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer