பெங்களூர்,
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் அதிமுக பொதுச் செயலா ளர் சசிகலா, சிறையிலிருந்து வெளியே சென்றதற்கான ஆதாரங்களை, கர்நாடக மாநில சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபா, ஊழல் தடுப்புப் பிரிவிடம் சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விமர்சித்த அதிமுக அம்மா அணியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பெங்களூர் புகழேந்தி முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா குறித்து தரம் தாழ்ந்து விமர்சித்தார். இது சமூக வலைதளங்களில் கடு
இந்நிலையில் இன்று புதிய வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பான பிரத்யேக காட்சியை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அந்த காட்சியில், சசிகலாவும், இளவரசியும் சாதாரண உடையில், சிறையின் பிரதான வாயிலுக்குள் நுழைவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. அவர்கள் இருவரும் கையில் பை ஒன்றை வைத்துள்ளனர்.
இந்தக் காட்சிகளின் மூலம் இருவரும், காவல்துறை உயரதிகாரிகளின் அனுமதியோடு வெளியே சென்று வந்தது தெரியவந்துள்ளது.
இந்த காட்சி ஆதாரத்தை ஊழல் தடுப்புப் பிரிவிடம் சமர்ப்பித்துள்ளதாகவும், இந்த வீடியோ ஆதாரங்கள் அனைத்தும் பரப்பன அக்ரஹார சிறைகண்காணிப்புக் கேமரா பதிவுகளிலிருந்து பெறப்பட்டதாகவும் சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபா கூறினார்.
இதுகுறித்து கர்நாடக மாநில அ.தி.மு.க. அம்மா அணி செயலாள ரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி கூறும்போது,
இந்த விடியோ காட்சிகள் அனைத்தும் பாகுபலி பட கிராபிக்ஸ் போல சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ காட்சிகளை கிராபிக்ஸ் செய்து வெளியிட்டு ரூபா வெளியிட்டு உள்ளார் என மரியாதை குறைவான வார்த்தைகயை உபயோகப்படுத்தி விமர்சித்தார்.
இது உண்மையான வீடியோ கிடையாது அவ(ள்) வேண்டும் என்றே திட்டமிட்டு இந்த வீடியோ காட்சியை வெளியிட்டு இருக்காள என்று ஒருமையில் பேசினார். சசிகலா புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து ரூபா செயல்பட்டு வருகிறாள் என்றும் தரம் தாழ்ந்து விமர்சித்தார்.
புகழேந்தியின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வன்மையாக கண்டிக்கப்பட்டு வருகிறது.