சென்னை,

முதல்வர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இன்று காலை சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற தீவிர ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து டிடிவி தினகரனுக்கு எதிராக 4 தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற  அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் சுமார் 70 பேர் மட்டுமே பங்கேற்றனர்.  40 எம்.எல்.ஏக்கள் கலந்துகொள்ளவில்லை.

தீர்மானம்

1. மிக விரைவில் கட்சியின்  செயற்குழுவும், பொதுக்குழுவும் கூட்டப்படும் என்றும்

2. டிடிவி தினகரனை கட்சி பணிகளில் இருந்து ஒதுக்கி வைப்பது.

3.  கட்சியின் அடிப்படையின் உறுப்பினர்கூட அல்லாத டிடிவி தினகரன்  கட்சி நிர்வாகிகளை நியமிக்கவோ, கட்சியில் இருந்து நீக்கவோ அதிகாரம் கிடையாது. அவர்களின் நியமனம் செல்லாது என்றும்,

4 ஆட்சிக்கும் கட்சிக்கும் எதிராக பயன்படுத்தும்,  ஜெயா டிவி தொலைக்காட்சி மற்றும் நமது எம்.ஜி. ஆர் பத்திரிகைகளை சட்டப்படி அவர்களிடம் இருந்து மீட்டு கையப்படுத்தவும் தீர்மானம் நிறைவேற்றம்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தீர்மானங்களில் சசிகலா பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும், டிடிவி தினகரனை ஒதுக்குவது என்பது சசிகலாவையும் ஒதுக்குவது என்றே கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.