சென்னை: சிறை தண்டனை முடிந்து விடுதலையான சசிகலா இன்று காலை பெங்களூருவில் இருந்து ஜெயலலிதாவின் காரில் அதிமுக கொடியுடன் பயணித்த நிலையில், தமிழக எல்லைக்கு வந்ததும், அதிமுக நிர்வாகி ஒருவரின் அதிமுக கொடி பொருத்தப்பட்ட இன்னோவா காரில பயணம் செய்து வருகிறார். அவருடன் அதிமுக நிர்வாகியும் வருவதால், அவரது காரில் இருந்து அதிமுக கொடியை நீக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து, கடந்த மாதம் 27-ந்தேதி சசிகலா விடுதலை ஆன சசசிகலா இன்று (8ந்தேதி) தமிழகம் வருகிறார். அவர் வரும் வழியில் அமமுகவினர் கோடிக்கணக்கில் செலவு செய்து பிரமாண்டமான வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
முன்னதாக, சசிகலா காரில் அதிமுக கொடி பறந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என காவல்துறையில் அதிமுக அமைச்சர்கள் புகார் கொடுத்தனர். இதையடுத்து, தமிழகத்திற்கு சசிகலா காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தால் அது அகற்றப்படும் என காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், அவரது காரில் இருந்து கொடியை அகற்ற முடியாது என அவரது வழக்கறிஞர்கள் கூறி வருகின்றனர். மேலும் இது தொடர்பான தேர்தல் ஆணைய அறிவிப்பு மற்றும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுகள், சசிகலா அதிமுக பெயரைத்தான் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளன. ஆனால், அதிமுக கட்சியை பயன்படுத்தக்கூடாது உத்தரவில் ஏதும் குறிப்பிடப்படவில்லை என்று கூறப்படடுகிறது.
இந்j நிலையில் ஓசூர் ஜூஜூவாடி அருகில் அதிமுக கொடியுடன் வந்த நிலையில் காரை மாற்றினார் சசிகலா. அவர் பயணித்த வாகனத்தில் இருந்து அதிமுக கொடி அகற்றப்பட்ட நிலையில் தமிழக எல்லையில் காரை மாற்றினார் சசிகலா.
அதிமுகவில் உள்ள நிர்வாகி ஒருவரின் அதிமுக கொடி பொருத்தப்பட்ட இன்னோவா காரில் சசிகலா பயணமாகி வருகிறார். அந்த காரில், சசிகலாவுடன், காரை கொடுத்துள்ள குறிப்பிட்ட நபரும் பயணம் செய்து வருகிறார். இதனால், சசிகலா பயணம் செய்யும் காரில் இருந்து அதிமுக கொடியை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காருக்கு சொந்தமானவர் அதிமுகவில் நீடித்து வருவதால், அவரது காரில் இருந்து கொடியை காவல்துறையினர் அகற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அதிமுக தலைமை அந்த குறிப்பிட்ட நபரை கட்சியில் இருந்து உடடினயாக நீக்கி நடவடிக்கை எடுத்தாலும், இதுபோல வேறுஒரு நபர், அவரது காரை கொடுக்க முன்வருவார் என்பதால், சசிகலா பயணம் செய்யும் காரில் இருந்து அதிமுக கொடியை அகற்றும், எடப்பாடி அரசின் நடவடிக்கை மாபெரும் தோல்வியாகவே முடிந்துள்ளது.
பெங்களூருவின் தேவனஹள்ளியிலிருந்து சென்னை புறப்பட்ட சசிகலாவுக்கு வரும் வழியில் ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர். அமமுகவினரும் சாலை இருமங்கிலும் நின்று வரவேற்று வருகின்றனர்.