மிழகத்தில் உச்சகட்ட அதிகார போட்டி நடந்துவரும் நிலையில், அதிமுக எம்எல்ஏக்களை சசிகலா தரப்பினர் கூவத்தூர் நட்சத்திர ஓட்டல்களில்  சிறை வைத்துள்ளதாக புகார் எழுந்தது. இது குறித்து தொடுக்கப்பட்ட வழக்கில்,  எம்.எல்.ஏக்களுக்கு சரியான உணவு கிடைக்கிறதா என்று ஆய்வு செய்யும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து இன்று காலை, கூவத்தூர் ஓட்டல்களில் அந்தபகுதி வட்டாட்சியர் மற்றும் டிஸ்பி தலைமையில் காவலர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.

இது குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை அங்கிருந்த சசிகலா ஆதரவாளர்கள் கல்வீசி தாக்கினார்கள். இதனால் பதட்டமான சூழல் நிலவியது.

ஆனால் கல்வீசி தாக்கியவர்கள் மீது, அங்கிருந்த டி.எஸ்.பியோ, காவலர்களோ எவ்வித நவடிக்கையும் எடுக்கவில்லை. வட்டாட்சியரும் கண்டுகொள்ளவில்லை.

இது செய்தியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்தது