தினகரனுக்கு சசிகலா ‘ரெட்’ சிக்னல்

Must read

சென்னை,

ஜாமீனில் வெளியே வந்திருக்கும் டி.டி.வி. தினகரனை சந்திக்க மீண்டும் சசிகலா மறுத்துள்ளதாக அ.தி.மு.க. வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இது குறித்து கூறப்படுவதாவது:

“இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அக் கட்சியின் துணைப்பொ துச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கைது செய்யப்பட்டார். தற்போது டில்லி நீதிமன்றத்தின் உத்திர வுப்படி தினகரன், ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்.

அ.தி.மு.க.வில் உச்ச கட்ட குழப்பம் நிலவும் இந்த சூழலில் கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவை, தினகரன் சந்திக்க, தகவல் தெரிவித்து அனுப்பினார்.  கட்சியை விட்டு விலகியதாக தினகரன் அறிவித்துவிட்டார். ஆனாலும், தனக்கு பொறுப்பு அளி்த்த சசிகலா கூறினால்தான் துணைப் பொதுச்செயலாளர் பதவியை துறப்பேன் என்று தெரிவித்து வந்தார்.

ஆகவே ஜாமீனில் வெளிவந்தவுடனேயே  சசிகலாவை சந்திக்க வேண்டும் என்று தனக்கு நெருக்கமான உறவினர் மூலம் செய்தி சொல்லி அனுப்பினார். ஆனால் தினகரனை சந்திக்க சசிகலா மறுத்துவிட்டார்.

தொடர்ந்து அரசியலில் இருக்க சசிகலாவின் அனுமதியை பெற  தினகரன் திட்டமிட்டிருந்தார். மேலும்  ஜூன் 16-ந் தேதிக்குள் கட்சியின் சின்னம் தொடர்பாக தேர்தல் கமி‌ஷனிடம் ஆவணங்கள் தாக்கல் செய்வேண்டியிருக்கிறது. அது  குறித்தும் சசிகலாவுடன் விவாதிக்க எண்ணியிருந்தார்.

ஆனால் தினகரனை சந்திக்க விரும்பவில்லை என்று சசிகலா சொல்லி அனுப்பிவிட்டார்.

டில்லி போலீசார் கைது செய்வதற்கு முன்பு, தினகரன் பெங்களூரு வந்து சசிகலாவை சந்திக்க முயற்சித்தார். அப்போதும் சசிகலா, மறுத்துவிட்டார்” என்று அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

More articles

Latest article