சென்னை

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் தன் மீது யார் புகார் அளித்தது என சசிகலா கேட்டுள்ளார்.

கடந்த வருடம் ஜெயலலிதா மரணம் அடைந்ததில் மர்மம் இருப்பதாக ஓ பி எஸ் உட்பட பலரும் சந்தேகம் தெரிவித்தனர்.   அப்போது பிரிந்திருந்த அதிமுக அணிகளில் இரு அணிகள் இணைந்த பின்னர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது.   அந்த ஆணையத்தில் இருந்து ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு அவர் இருக்கும் பெங்களூரு சிறைக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

தான் மௌன விரதம் இருப்பதால் தனது வழக்கறிஞர் தமக்கு பதிலாக ஆஜராவார் என சசிகலா தெரிவித்திருந்தார்.    அதன்படி ஆஜரான சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.   அம்மனுவில் சசிகலாவின் சார்பில், “என் மீது புகார் அளித்தது யார் என்னும் விவரங்கள் எனக்கு தெரியப் படுஹ்த வேண்டும்.   அந்த பதிலை தந்தால் மட்டுமே என்னால் விசாரணை ஆணையத்தின் சம்மனுக்கு பதில் அளிக்க முடியும்.   இந்த விவரங்களை ஆணையம் அளித்த பின் 15 நாட்களுக்குள் பதில் அளிக்கத் தயார்” என கூறப்பட்டுள்ளது.