டந்த சனிக்கிழமை அன்று பாராளுமன்ற மேலவை உறுப்பினர் சசிகலா புஷ்பா (அ.தி.மு.க.), சக உறுப்பினரான திருச்சி சிவா (தி.மு.க.)வை  டில்லி ஏர்போர்ட்டில் வைத்து அடித்த விவகாரம் நாட்டையே உலுக்கியது.
இந்த கைகலப்புக்குப் பிறகு, பராளுமன்றத்தில் பேசிய சசிகலா புஷ்பா, தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்தார். அதே நேரம் தனது கட்சி தலைவரான ஜெயலலிதா மீது புகார் கூறினார். தன்னை அறையில் அடைத்துவைத்ததாகவும், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
சக எம்.பிக்கள் பொது இடத்தில் அடித்துக்கொண்டது,  முதல்வர் மீது எம்.பி. புகார் கூறுவது ஆகியவற்றை மத்திய அரசு சீரிஸாக எடுத்துக்கொண்டிருக்கிறது. இது குறித்து அதிகார மட்டத்தில் வெளிப்படையாக கருத்து ஏதும் சொல்லப்படவில்லை என்றாலும், இச் சம்பவங்கள் குறித்து முழுமையான  அறிக்கையை உளவுத்துறையிடம்  மத்திய அரசு கேட்டிருக்கிறது.
1
டில்லி ஏர்போர்ட்டில் ந டந்த சசிகலாபுஷ்பா – திருச்சி சிவா அடிதடி வீடியோ காட்சிகளை உள்ளடக்கிய பதிவை, உள்துறை அதிகாரிகள் வாங்கிச் சென்றதாக டில்லி தகவல்கள் தெரிவித்தன.  அந்த வீடியோ காட்சி அடங்கிய பதிவை வாங்கிச் சென்றவர்கள்  உள்துறை அதிகாரிகள் அல்ல என்றும்,    மத்திய உளவுத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள்தான் வாங்கிச் சென்றார்கள்  என்றும் தற்போது கூறப்படுகிறது.
இதையடுத்து இந்த விவகாரத்தை மத்திய அரசு சீரிஸாக எடுத்துக்கொண்டிருப்பதை அறியமுடிகிறது.  அதே நேரம், சசிகலாபுஷ்பா, திருச்சி சிவா இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தகுதி நீக்கம் செய்ய முடியுமா என்று சட்ட ஆலோசனைகள் நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.