ஜெ. மரணத்தில் மர்மம்..ஜனாதிபதியிடம் சசிகலா புஷ்பா மனு

Must read

டெல்லி: ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று எம்.பி சசிகலா புஷ்பா உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து மனு அளித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக.வில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி. சசிகலா புஷ்பா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 

இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை நேற்று சசிகலா புஷ்பா திடீரென சந்தித்தார். ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனு அளித்தார். மனு பெற்றுக் கொண்ட ராஜ்நாத் சிங் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில் இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து சசிகலா புஷ்பா மனு அளித்தார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது. அதனால் இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
 
Sasikala pushpa submits memorandum to President Pranab Mukherjee to probe on Jayalalitha’s death.

More articles

Latest article