சசிகலா புஷ்பா கணவர் சொந்த ஜாமீனில் விடுவிப்பு

Must read

சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர திலகர் அதிமுக தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி, அவரை அங்கிருந்த அதிமுகவினர் கடுமையாக தாக்கினர். அவரை  காவல்துறையினர்  மீட்டு அழைத்து சென்றனர்.
இந்த நிலையில் தனது கணவர் எங்கே என தெரியவில்லை என்று கூறி,  சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா, ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார் சசிகலா புஷ்பா. இந்த மனு விசாரணைக்கு வரும் நிலையில், சசிகலா புஷ்பாவின் கணவரை, காவல்துறையினர் சொந்த ஜாமீனில் விடுவித்தனர். .
ராயப்பேட்டை போலீசார், “ஏற்கனவே லிங்கேஸ்வர திலகத்தின் மீது இருந்த வழக்குகளுகளுக்காக அவரை கதை செய்தோம். பிறகு சொந்த ஜாமீனில் விடுவித்தோம்” என்று தெரிவித்தனர்.
Also read

More articles

Latest article