பெங்களூரு:

பெங்களூரு சிறை வளாகத்தில், சொத்துக்குவிப்பு வழக்கில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, ஒய்யாரமாக போஸ் கொடுக்கும்  புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிறைக்கைதிகளுக்கான உடை இல்லாமல் அவர் மாடர்ன் டிரெஸ்ஸான சுடிதாரில் இருக்கும் படம் வெளியாகி உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை விதிகளை மீறி சசிகலா, அவரது உறவினர் இளவரசி போன்றோர், சிறை அதிகாரிகளும் லஞ்சம் கொடுத்துவிட்டு, அவ்வப்போது வெளியே சென்று சுற்றி வந்தததாகவும் புகார் எழுந்தது. கடந்த ஆண்டு அப்போதை சிறைத்துறை டிஜிபி அது தொடர்பான வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். பின்னர் விசாரணையிலும், சிகலாவுக்கு, சிறை விதிகளை மீறி சிறப்பு சலுகைகள் வழங்கியது உண்மை என்று நிரூபணமானது.

இந்த நிலையில்,  சசிகலா சுடிதார் அணிந்துகொண்டு, சிறைச்சாலையில் உள்ள தனது அறைக்கு முன் நிற்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சிறை அதிகாரிகள்,  ஆயுள் தண்டனை கைதிகளுக்கு மட்டும்தான் சிறைச்சாலையில் விதிகளின்படி ஆடை வழங்கப்படும் என்றும், ஊழல் வழக்கு மற்றும் ஓராண்டு, இரண்டாண்டு போன்ற கைதிகளுக்கு அவர்கள் விரும்பும் ஆடையை அணிந்து கொள்ள உரிமை உண்டு என்று தெரிவித்து உள்ளார்.

அதே வேளையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒரு கைதியை யார் இவ்வாறு புகைப்படம் எடுத்தது, அதுஎப்படி வெளியானது என்பது குறித்து சிறை அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது…

பணம் பாதாளம் வரைக்கும் பாயும் என்பதற்கு சிறையில் சசிகலா தண்டனைக்கு பதில் வசதி வாய்ப்புகளை அனுபவித்து வருவதே சாட்சி….