சென்னை,

திமுக பொருளாளர் பதவியில் இருந்து என்னை நீக்க சசிகலா யார்? என தமிழக முதல்வர் ஓபிஎஸ் ஆவேசமாக கூறினார்.

ஜெயலலிதா கொடுத்த பொருளாளர் பதவியிலிருந்து என்னை நீக்க சசிகலா யார். அவர் என்னை நீக்க முடியாது என ஆவேசமாக கூறினார் ஓ.பன்னீர் செல்வம்.

நேற்று இரவு  சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் சுமார் 40 நிமிடம் தியானம் செய்து விட்டு பின்னர் அதிரடி பேட்டி கொடுத்தார் ஓபிஎஸ். இதன் காரணமாக தமிழகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.  தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

சசிகலாமீது அதிரடி குற்றச்சாட்டு கூறியதை தொடர்ந்து, நேற்று நள்ளிரவு நடைபெற்ற போயஸ் தோட்ட ஆலோ சனைக்கு பிறகு, கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ்-ஐ நீக்கி சசிகலா அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார்.

இதற்கு பதிலளித்த ஓபிஎஸ், அதிமுக பொருளாளர் பதவி எனக்கு ஜெயலலிதா கொடுத்தது. சசிகலா என்னை நீக்க முடியாது என்று கூறினார்.

தனியார் தொலைக்காட்சிக்கு ஓபிஎஸ் கொடுத்த பேட்டியில்,  10 ஆண்டுகளுக்கு முன்பு என்னை அதிமுக பொருளாள ராக நியமித்தார் ஜெயலலிதா. அவருக்கு மன நிறைவு தரும் வகையில் நான் பணியாற்றியுள்ளேன்.

அந்தப் பதவியிலிருந்து என்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. என்னை நீக்க முடியாது.

நான் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினைப் பார்த்து சிரித்ததை குற்றமாக சொல்லியுள்ளனர். மனிதனுக்கும், மிருகத்துக்கும் இடையே உள்ள ஒரே குணம் சிரிப்பதுதான்.  அதனால், அது குற்றம் இல்லை என்று கூறினார்.