சென்னை:

தமிழகத்தில் சசிகலா குடும்பத்தின் அராஜக ஆட்சி தொடரக்கூடாது என்று முன்னாள் முதல்அமைச்சர் ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சட்டசபையில் இன்று நடந்த சம்பவங்கள் ஜனநாயக படுகொலையாகும். இந்த அரசை எதிர்த்து மக்கள் பல்வேறு வழிகளில் தங்களின் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

சசிகலா குடும்பத்தின் அராஜக ஆட்சி தமிழகத்தில் தொடரக்கூடாது. அதிமுகவில் சசிகலா குடும்பத்தின் பிடி இறுக்கி கொண்டு வருகிறது’’ என்றார்.

[youtube-feed feed=1]