சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா தீபாவளி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் 4ந்தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில்,  தீபாவளிக்கு வாழ்த்து தெரிவித்து, அதிமுக பொதுச்செயலாளர் என்று அச்சிடப் பட்ட லெட்டர் பேரில்  சசிகலா அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  ‘இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும் தீமைகள் அகன்று நன்மைகள் பிரகாசிக்கும் தினமாக வும் கொண்டாடப்படுகின்ற இந்த நன்னாளில் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரும் தொற்றான கொரோனா என்னும் கொடிய நோயை வென்று மனிதகுலம்மீண்டும் புத்துயிர் பெற்று கொண்டாடும் வகையில் இந்த தீபாவளி திருநாளில், அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிவதுடன், தடுப்பூசியையும் தவறாமல் செலுத்தி கொண்டு கவனமாக சந்தோசத்துடன் இந்த தீப ஒளி திருநாளை கொண்டாட வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

‘சசிகலா புரட்சித்தாயா?’ என்னப்பா புரட்சி செய்தார்? 

நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த நினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத்திருநாளில், சூழ்ச்சிகளும் தீமைகளும் நம்மை விட்டு விலக நன்மையும், அன்பும் நாடி வரஇன்பமாய் கொண்டாடுவோம் தீபாவளியை இந்த இனிய திருநாளில், நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும்.

வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும். அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என்று இறைவனை வேண்டி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை, உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு விட்டதாக கடந்த 4 ஆண்டுகளாக கூறி வரும் அதிமுக தலைவர்கள்,  தற்போது சசிகலா தான்தான் பொதுச்செயலாளர் என்று பகிரங்கமாக மார்த்தட்டிக்கொண்டு இருப்பதை தடுக்க முடியாத நிலையில், அதுகுறித்து விமர்சிக்கக்கூட பயந்து தொடை நடுங்கிக்கொண்டிருக்கின்றனர்.  அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று ஓபிஎஸ்-ம், துணை ஒருங்கிணைப்பாளர் என எடப்பாடி பழனிச்சாமியும் கூறிக்கொண்டு அறிக்கைகளை வெளியிட்டு வரும் சசிகலாவை தடுக்க முடியாதவர் களாக உள்ளனர்.

தற்போது பகிரங்கமாக அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில், அவர் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதைக்கூட கண்டிக்க முடியாத தொடை நடுங்கிகளான இபிஎஸ், ஓபிஎஸ் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருக்கின்றனர். இதனால், அவர்கள் இருவரும் கட்சி பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்றும்,  அவர்கள் கட்சிக்குள் இருப்பதே வேஸ்ட் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.