
அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஆகவே விரைவில் அவர் முதல்வராக பதவி ஏற்பார் என்பது உறுதியாகி உள்ளது.
இது குறித்து அரசியல் பிரமுகர்கள் மட்டுமின்றி பல்வேறு துறை பிரமுகர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்துவருகிறார்கள்.
இந்த நிலையில்,கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழக இளைஞர்களுக்கு விரைவில் 234 பணி இடங்கள் வர உள்ளது’ எனக்கூறியுள்ளார். அதாவது, சசிகலா முதல்வர் பதவியேற்க இருக்கும் சூழலில் அதற்கு எதிர்ப்பு ஏற்பட்டு தமிழக ஆட்சி கலையும். இதனால் பொதுத்தேர்தல் வரும் என்கிற அர்த்தத்தில் ட்விட்டியிருக்கிறார் அஸ்வின்.
Patrikai.com official YouTube Channel