பெங்களூரு:

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் நீதிபதி குண்ஹா தீர்ப்பை உறுதி செய்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு கூறியது. அதைத்தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களுர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பெங்களூர் பரப்பன அக்ரஹார  சிறைச்சாலையில் பெண்களுக்கான செல்லலில் சசிகலா மற்றும் இளவரசி  அடைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது தமிழகத்தில் அவரது ஆதரவு முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைந்துள்ளதால் சசிகலா மகிழ்ச்சியாக காணப்படுவதாக சிறைத்துறை தகவல்கள் கூறுகின்றன.

இதற்கிடையில்,  பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற அவரது உறவினர்கள் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறையில் சசிகலாவை  வக்கீல்கள் அசோகன், செந்தில், பரணிகுமார் ஆகியோர்  சந்தித்து பேசினர்.

அதைத்தொடர்ந்து பெங்களூருவில் உள்ள மூத்த வக்கீல்களுடனும் ஆலோசனை நடத்தி வருவ தாக தெரியவருகிறது.  வரும் திங்கள்கிழமை கர்நாடக ஐகோர்டில் மனு தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது.

இதற்கிடையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி வெற்றிபெற்றால், உடனடியாக பெங்களூர் சென்று சசிகலாவை சந்திப்பார் என கூறப்படுகிறது.